அனைவருக்குமான அதிபராக இருப்பேன்: வெற்றி பெற்ற ஜோபைடன் உரை!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த சில நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்த ஜோபைடன் வெற்றி பெற்றதாக நேற்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 284 வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270 வாக்குகள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் அவர்களும் வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து ஜோபைடன், கமலா ஹாரீஸ் ஆகிய இருவரும் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் வெற்றிக்குப் பின்னர் நாட்டு மக்களிடம் உரையாடிய ஜோ பைடன் ’டிரம்புக்கு வாக்களித்தவர்களும் அமெரிக்க மக்கள் என்பதால் அனைவருக்குமான அதிபராக நான் இருப்பேன் என்றும் நீலம் சிகப்பு மாகாணங்கள் என்ற பிரிவினை இருக்காது என்றும் தெரிவித்தார். மேலும் அமெரிக்க மக்கள் இந்தத் தேர்தலில் ஒரு தெளிவான முடிவை எடுத்து உள்ளார்கள் என்றும், இந்த கொரோனா காலத்தில் பெருந்திரளாக வந்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் கூறினார்
அதேபோல் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் நாட்டு மக்களிடம் கூறியபோது ’அமெரிக்க தேர்தல் மூலம் ஒரு பெண் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபித்துள்ளோம் என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் வாக்களிக்கும் உரிமையைப் பெற்ற பெண்கள் தற்போது ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்துள்ளனர் என்றும் முன்னாள் அதிபர் ஒபாமா வழியில் அமெரிக்காவின் நலனுக்காக செயல்படுவேன்’ என்றும் கூறியுள்ளார்
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments