பிணங்கள் நடுவே ஒரு டான்ஸ்.. அதிர்ச்சி அடைந்த மீனா.. உருக்கத்துடன் வாழ்த்திய சாண்டி மாஸ்டர்..!

  • IndiaGlitz, [Friday,April 05 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் நிகழ்ச்சியான ’ஜோடி ஆர் யூ ரெடி’ என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் ஒரு ஜோடி பிணங்கள் செட்டப்புடன் கூடிய ஒரு இடத்தில் நடனமாடிய நிலையில் அவர்களது உருக்கமான கதையை கேட்டு மீனா அதிர்ச்சி அடைந்த காட்சியும், சாண்டி மாஸ்டர் உருக்கமாக வாழ்த்து கூறிய காட்சியும் புரமோ வீடியோவில் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் தற்போது ’ஜோடி ஆர்யூ ரெடி’ என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகைகள் மீனா, ஸ்ரீதேவி மற்றும் சாண்டி மாஸ்டர் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வார புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் போட்டியாளர்கள் இருவர் மேடையில் பிணங்களை எரிப்பது போன்ற செட்டப்பில் அற்புதமாக டான்ஸ் ஆடும் காட்சி உள்ளது. தீயை மூட்டி வைத்து அதில் நடனம் ஆடுவதை பார்த்து நடுவர்கள் ஆச்சரியமடைந்தனர். டான்ஸ் ஆடி முடிந்ததும் கொரோனா சமயத்தில் தனது தந்தை உயிரிழந்துவிட்டார் என்றும், அனாதை பிணங்களை எரிக்க மாட்டோம் என்று சொன்ன நிலையில் நாங்களே அந்த பிணங்களை எரித்ததாகவும் கவலையுடன் கூறினார்.

டான்சர்கள் கூறியதை கண்கலங்கி கேட்ட மீனா அதிர்ச்சி அடைய, சாண்டி மாஸ்டர் உருக்கமாக ’அப்பாவின் ஆசையை நீ நிச்சயம் நிறைவேற்றுவாய், எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். இந்த புரமோ வீடியோவை பார்க்கும் போதே நெகிழ்ச்சியாக இருக்கும் நிலையில் ஒரிஜினல் நிகழ்ச்சியை பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை வரும் சனி ஞாயிறு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.