தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை. டெல்லி தமிழ் மாணவரின் தந்தை பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.பில் படித்து கொண்டிருந்த மாணவர் முத்துகிருஷ்ணன் நேற்று தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் தமிழகத்தை மட்டுமின்றி நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்வலையை எழுப்பியது. மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றிருப்பதாகவும், பிரேத பரிசோதனையின் அறிக்கைக்கு பின்னரே அடுத்தகட்ட விசாரணை தொடங்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் தங்களது மகன் முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த சேலத்தை சேர்ந்த அவருடைய பெற்றோர்கள் ஜீவானந்தம் - அலமேலு நேற்றிரவு டெல்லி கிளம்பி சென்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முத்துகிருஷ்ணன் தந்தை ஜீவானந்தம், "முத்துகிருஷ்ணன் நேற்று மாலை வழக்கம் போல தொலைபேசியில் பேசினான். இந்த வாரம் ஞாயிறு அன்று ஊருக்கு வருவதாக கூறியிருந்தான். தற்கொலை செய்யும் அளவிற்கு எங்கள் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவன் கோழையும் கிடையாது. முத்துகிருஷ்ணன் 100 பேர்களை காப்பாற்றும் அளவுக்கு தைரியம் உள்ளவன். அவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான் என்பதை நம்பவே முடியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments