'பேட்ட' விஜய்சேதுபதியின் அட்டகாசமான கெட்டப்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயரும் கெட்டப்பும் இன்று மாலை வெளிவரவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் 'பேட்ட' படத்தில் விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயர் 'ஜித்து' என்று அறிவித்து ஒரு அட்டகாசமான ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளது.

நடிப்பு பிசாசு விஜய்சேதுபதி சாதாரண படத்திலேயே சூப்பராக நடித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் படத்தில் அவரது நடிப்பை கேட்கவா வேண்டும்? ரஜினியுடன் மாஸாக மோதும் விஜய்சேதுபதியை திரையில் பார்க்க அனைவரும் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.