பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷின் முதல் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வகையில் டபுள் எவிக்சன் செய்யப்பட்டது. சனிக்கிழமை ஜித்தன் ரமேஷூம், ஞாயிற்றுக்கிழமை நிஷாவும் எவிக்சன் செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜித்தன் ரமேஷ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். பிக்பாஸ் வீட்டில் உண்மையாகவே எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த பிக்பாஸ் வீட்டில் நான் 70 நாள் இருந்திருக்கின்றேன். உங்களுடைய ஆதரவு இல்லாமல் நான் இத்தனை நாள் இருந்திருக்க முடியாது. அதனால் முதலில் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள். நீங்கள் இல்லை என்றால் நான் இவ்வளவு நாள் இருந்திருக்க முடியாது. எனக்கு பிக்பாஸ் வீட்டில் ஆதரவு கொடுத்தது போல் எனது வரப்போகும் படங்களுக்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். மறுபடியும் எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது மிக்க நன்றி என்று அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

More News

முதலை அருகே விழுந்த கோல்ப் பந்து: எடுக்க சென்ற வாலிபரின் வீடியோ வைரல்!

முதலை அருகே விழுந்த கோல்ப் பந்தை எடுக்கச் சென்ற வாலிபரின் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

அந்த நைட்டியை நான் தான் வாங்கி கொடுத்தேன்: விஜே சித்ரா மரணம் குறித்து இயக்குனர்!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்த போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்றுசேரத் தயார்: கமல் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும்

திருமதி ஹிட்லர்: ஜீடிவியில் அம்பிகா நடிக்கும் புதிய தொடர்!

ஜீ டிவியில் நேற்று முதல் 'திருமதி ஹிட்லர்' என்ற புதிய தொலைக்காட்சி தொடர் ஆரம்பமாகியுள்ளது. மாலை 6,30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார்

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஆதரவு… எடப்பாடி பழனிசாமி உறுதி!!!

கொரோனா காலத்தில் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக இருந்து வந்தது. இதனால் கொரோனா தாக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி