'ஜித்தன்' ரமேஷின் அடுத்த பட டைட்டில் மற்றும் டீசர் வெளியீடு

  • IndiaGlitz, [Wednesday,August 21 2019]

'ஜித்தன்' படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரியான நடிகர் ரமேஷ் அதன்பின் விஜய்யின் 'ஜில்லா' உள்பட ஒருசில படங்களில் நடித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு இவரது நடிப்பில் 'ஜித்தன் 2' திரைப்படமும் வெளியானது. இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடித்துள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

ஜித்தன் ரமேஷின் அடுத்த படத்திற்கு 'மிரட்சி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரொமான்ஸ் மற்றும் த்ரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தை எம்வி கிருஷ்ணா என்பவர் இயக்கியுள்ளார். ஜித்தன் ரமேஷ், ஈனா சாஹா, சாய், ஷாரதா தாஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த் இசையமைத்துள்ளார். ரவி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படத்தை டேக் ஓகே கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டீசரில் ஐஸ் கட்டியின் மேல் நாயகியை தூக்கு கயிற்றில் வில்லன்கள் கட்டி வைத்திருக்க, அந்த ஐஸ் கட்டி உருகுவதற்குள் நாயகன் வந்து நாயகியை காப்பாற்றுகிறாரா? என்பதுதான் கதை என தெரிகிறது. மேலும் இதுவொரு உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் டீசரின் டைட்டிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.