கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்க விருப்பப்படும் இளைஞர்.. ஜியோ ஹாட்ஸ்டார் டொமைன் உதவுமா?

  • IndiaGlitz, [Friday,October 25 2024]

ஜியோ மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள நிலையில், இதை முன்கூட்டியே கணித்த டெக் வல்லுனர் ஒருவர் ஜியோஹாட்ஸ்டார் டொமைனை வாங்கியிருப்பதாகவும், அந்த டொமைன் தேவை என்றால் என்னிடம் வாங்கிக்கொள்ளலாம். அந்த பணத்தை வைத்து நான் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகிறேன் என தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளங்கள் இணைந்துள்ளதால் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்ற பொதுவான பெயரில் இயங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு நிறுவனங்களுமே தனித்தனியாக அதிக சந்தாதாரர்களை வைத்திருக்கும் நிலையில், தற்போது இணைந்து உள்ளதால் ஸ்ட்ரீமிங் சந்தையில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைவதை ஒரு வருடத்திற்கு முன்பே கணித்து, இது குறித்த டொமைனை வாங்கியுள்ளார். ஜியோஹாட்ஸ்டார்.காம் என்று டொமைனை அவர் வாங்கியுள்ள நிலையில், தற்போது இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளதால், இந்த டொமைன் தேவைப்பட்டால் ரிலையன்ஸ் நிறுவனம் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும், அதை ஒரு பெரிய தொகைக்கு விற்பனை செய்ய தயார் என்றும், இதில் கிடைக்கும் தொகையின் மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க விருப்பப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

ஜியோ நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு இந்த டொமைனை வாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.