ஜியோ டிவியில் தமிழ் ஹெச்டி சேனல்: வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கேபிள் டிவி கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் முக்கிய சேனல்களை மட்டுமே பார்த்தால் கூட அதற்கு சுமார் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பலர் கேபிள் டிவி இணைப்புக்கு பதிலாக ஃபயர்ஸ்டிக் முறைக்கு மாறி வருகின்றனர். வீட்டில் இண்டர்நெட் இருந்தாலே போதும். பெரும்பாலான டிவி சேனல்களை இதன்மூலம் இலவசமாகவே பார்த்து கொள்ளலாம்
இந்த நிலையில் தொலைத்தொடர்பு துறையில் ஒரு புரட்சியை செய்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் ஒரு பிரிவான ஜியோ டிவி தற்போது தமிழ் உள்பட நான்கு புதிய ஹெச்டி சேனல்களை அறிமுகம் செய்துள்ளது. ஜியோ பாலிவுட் ப்ரீமியம் ஹெச்டி , ஜியோ பாலிவுட் கிளாசிக் ஹெச்டி , ஜியோ தமிழ் ஹிட்ஸ் ஹெச்டி மற்றும் ஜியோ தெலுங்கு ஹிட்ஸ் ஹெச்டி ஆகிய இந்த இந்த சேனல்கள்தான் தற்போது ஜியோ டிவியின் செயலியில் இணைக்கப்படுள்ளது. இந்த சேனல்களை ஆண்ட்ராய்டு டிவி மற்றும் மொபைல் போன்களில் பார்த்து கொள்ளலாம்.
ஜியோ டிவி ஏற்கனவே சுமார் 600 சேனல்களை தங்களது பயனர்களுக்கு வழங்கி வரும் நிலையில் தற்போது தமிழ் உள்பட மேலும் நான்கு புதிய சேனல்களை வழங்கியுள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. தனியார் தொலைக்காட்சிகள் போட்டி போட்டு கொண்டு நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நிலையில் சத்தமில்லாமல் ஜியோ செய்யும் இந்த தொழில்நுட்ப புரட்சி மற்ற சேனல்களுக்கு ஒரு பெரும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout