ஐபிஎல் முடிந்ததும் நேரடி தமிழ் படத்தை ரிலீஸ் செய்கிறதா ஜியோ சினிமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை இலவசமாக ஜியோ சினிமா ஒளிபரப்பி வருகிறது என்பதும் இதன் காரணமாக அந்த ஓடிடி தளத்திற்கு லட்சக்கணக்கான புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர் என்பது தெரிந்ததே.
ஆனால் அதே நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்துவிட்டால் ஜியோ சினிமாவில் இருந்து வாடிக்கையாளர்கள் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜியோ சினிமா தனக்கு கிடைத்த வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சமீபத்தில் ஜியோ சினிமா வருட சந்தா ரூபாய் 999 என அறிமுகம் செய்த நிலையில் தற்போது புதிய திரைப்படங்களை நேரடியாக ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக விஷ்ணு விஷால் நடித்த ’மோகன் தாஸ்’ என்ற திரைப்படத்தை ஜியோ சினிமா நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே HBO, வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களுடன் ஜியோ சினிமா ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்நிறுவனங்களின் படங்களை இனி ஜியோ சினிமாவில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com