ஆபாச வலைத்தளங்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ
- IndiaGlitz, [Thursday,October 25 2018]
செல்போன் பயனாளிகள் கடந்த ஆண்டு வரை இண்டர்நெட் டேட்டாவுக்கு அதிக கட்டணம் செலுத்தி கொண்டிருந்ததால் ஆபாச வலைத்தளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஜியோ அறிமுகமான பின்னர், இலவச டேட்டாக்கள் அதிகம் கிடைப்பதால் ஆபாச வலைத்தளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்ததாக ஆய்வு முடிவு ஒன்று வெளியானது, இதனையடுத்து உத்தரகாண்ட் உயர் நீதி மன்றம், 857 ஆபாச வலைத்தளங்களை உடனே முடக்கும்படி இணையச் சேவை வழங்குநர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜியோவால்தான் ஆபாச வலைத்தளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என்ற கறையை போக்க ஜியோ தானாகவே முன்வந்து ஆபாச வலைத்தளங்களை முடக்கும் பணியில் ஈடுபட்டது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் ஜியோ வாடிக்கையாளர்களால் ஆபாச வலைத்தளங்களை பார்க்க முடியவில்லை.
ஜியோவின் இந்த பொருப்புமிக்க நடவடிக்கையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதேபோன்று மற்ற இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களும் ஆபாச வலைத்தளங்களை முடக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.