ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு சலுகை அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான சில மாதங்களிலேயே புதிய புரட்சி செய்த ரிலையன்ஸ் ஜியோ, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தற்போது 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் நிலையில் இரண்டு புதிய சலுகைகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது
ரூ.199 மற்றும் ரூ.299 ஆகிய இரண்டு புதிய திட்டங்களில் உள்ள சலுகைகள் குறித்து பார்ப்போம்
28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.199 திட்டத்தில் தினமும் 1.2 ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி 28 நாட்களுக்கு எந்த நிறுவனத்தின் செல்போன்களுக்கும் வரம்பற்ற வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். வசதி உண்டு
இதேபோல் ரூ.299 திட்டமானது நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் 28 நாட்கள் கொண்டது. ரூ.199 திட்டத்தை போல இதுவும் வரம்பற்ற அழைப்புகளை கொண்டது.
ஆனால் அதே நேரத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ரூ.199க்கு 28 நாட்களுக்கு 28 ஜிபி என்ற சலுகையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களின் போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு சலுகை மேல் சலுகை கிடைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com