'புலி'-ஜிங்குலியா புரமோ பாடல் விமர்சனம்

  • IndiaGlitz, [Thursday,September 24 2015]

நேற்று ஒரே நாளில் இளையதளபதி விஜய்யின் 'புலி' இரண்டாவது டிரைலர் மற்றும் தல அஜீத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி விஜய், அஜீத் ரசிகர்களை விடிய விடிய உற்சாகத்தில் வைத்திருந்த நிலையில் இன்று 'புலி' படத்தின் ஜிங்குலியா' புரமோ பாடல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிம்புதேவனின் அதிகாரபூர்வ சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த புரமோ பாடல் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முதல் ஷாட்டிலேயே விஜய் மரத்தில் சறுக்கி கொண்டு வரும் காட்சி நிச்சயம் குழந்தைகளை கவரும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பாடலில் ஸ்ருதிஹாசனின் வித்தியாசமான மேக்கப் மற்றும் காஸ்ட்யூம்களை வைத்து பார்க்கும்போது படக்குழுவினர்களின் கடுமையான உழைப்பு தெரிகிறது. விஜய்யின் இரண்டு பக்க இடுப்பிலும் ஒரே நேரத்தில் 11 பெண்கள் உட்கார்ந்திருப்பதாக உள்ள காட்சியில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸின் பர்பெக்ஷன் முழுமையாக தெரிகிறது.

விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவருமே நல்ல டான்சர்கள் என்பதால் பாடலின் வேகத்திற்கேற்ப இருவரும் ஆடியுள்ள அட்டகாசமான ஜிங்குலியா நடனம் கண்டிப்பாக இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்பது உறுதி.

சித்திரக்குள்ளர், சித்திரக்குள்ளிகளாக வரும் ரோபோ சங்கர், வித்யூலேகா, அலி, இமான் அண்ணாச்சி அவர்களுடைய ஆட்டமும் ரசிக்கும்படி உள்ளது. மொத்தத்தில் டிரைலர் மற்றும் புரமோ பாடல்கள் ஆகியவை விஜய் ரசிகர்களை மட்டுமின்றி நாம் முன்பே பார்த்தவாறு குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களையும் நிச்சயம் கவரும் படம்தான் 'புலி' என்பது மேலும் மேலும் உறுதியாகியுள்ளது.