ஜிமிக்கி கம்மல் டான்ஸ் ஷெரிலுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய், ஓவியா டிரெண்டுகளுக்கு இணையாக டிரெண்ட் ஆன ஒரு விஷயம் ஜிம்மி கம்மல் வீடியோ. ஓணம் கொண்டாட்டத்தின்போது ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய ஜிமிக்கி கம்மல் டான்ஸ் வீடியோ ஒரு வாரம் ஆகிய பின்னரும் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது.
இந்த வீடியோவில் டான்ஸ் ஆடியவர்கள் கொச்சின் 'இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள். இந்த ஆசிரியர்களில் ஒருவர்தான் ஷெரில். சமீபத்தில் பேட்டியளித்த ஷெரில் இந்த டான்ஸ் பாடல் குறித்து கூறியபோது, 'ஓணம் மற்றும் ஆசிரியர் தினம் இரண்டும் இந்த வருடம் இணைந்து வந்ததால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி இருக்கக்கூடாது என்பதற்காக இணைந்து செய்த டான்ஸ் தான் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்.
இந்த ஐடியாவை எங்களுக்கு கொடுத்தவர் எங்கள் மேனேஜர் மிதுன் தான். இருபது ஆசிரியர்கள், நாற்பது மாணவிகள் சேர்ந்து பிராக்டீஸ் செய்தோம். ஆனால் இந்த அளவுக்கு இணையதளங்களில் வைரலாகும் என்று நினைக்கவில்லை
இந்த டான்ஸ் ஹிட் ஆனதும் மலையாள திரையுலகினர்கள் பலர் நடிக்க அழைத்தனர். ஆனால் நான் விரும்பி செய்து கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை விட எனக்கு மனம் வரவில்லை. இருப்பினும் நல்ல கேரக்டர் கிடைத்தால் தமிழ் அல்லது மலையாளத்தில் நடிப்பேன்' என்று கூறினார்.
மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் சூர்யா என்றும், அவர் நடித்த 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தை கணக்கு வழக்கில்லாமல் பார்த்துள்ளதாகவும் ஷெரில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments