எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்: ஜிமிக்கி கம்மல் ஷெரில்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் என்ற ஒரே ஒரு நிகழ்ச்சியால் மில்லியன் கணக்கான இளைஞர்களின் மனதில் கொள்ளை கொண்ட ஓவியாவை போல ஓரே ஒரு வீடியோவின் மூலம் தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இணையதளத்தில் வைரலானவர் ஜிமிக்கி கம்மல் ஷெரில்.
ஓணம் தினத்தன்று வெளியான ஷெரில் குழுவினர்களின் நடன வீடியோவுக்கு ஒருசில நாட்களில் 9 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்ததில் இருந்தே இதன் வெற்றியை புரிந்து கொள்ளலாம்.
கொச்சியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆஃப் கமார்சஸ் கல்லூரியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த வீடியோவை தயாரித்துள்ளனர். அதிலும் ஷெரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்த கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் தனக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ஷெரில் கூறுகையில், 'இதனை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் நடிக்கத் தயார் தான். ஆனால் வீட்டில் ஒப்புக் கொள்வார்களா என்று தெரியவில்லை. தற்போதைக்கு எதுவும் முடிவு செய்யவில்லை. தமிழில் எனக்குப் பிடித்த நடிகர் அஜித் தான்" என்று தெரிவித்துள்ளார்.
ஷெரில் பெயரில் டுவிட்டர் பயனாளிகள் ஆர்மியை தொடங்கிவிட்டனர் என்பது கூடுதல் தகவல்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com