ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜிமிக்கி கம்மல் ஷெரில்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜிமிக்கி கம்மல் என்ற ஒரே பாடலின் மூலம் சமூக வலைத்தளங்களில் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனவர் ஷெரில். கல்லூரி பேராசிரியரான இவர் 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடிய நடனம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தது.

இந்த நிலையில் ஷெரிலுக்கு மலையாள திரையுலகில் இருந்து மட்டுமின்றி தென்னிந்தியாவில் உள்ள முன்னணி இயக்குனர்களிடம் இருந்து நடிக்க வாய்ப்பு வந்தது. விஜய்யின் அடுத்த படத்தில், சூர்யாவின் அடுத்த படத்தில் ஷெரில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

ஆனால் இந்த செய்திகளை பொய்யாகி இளைஞர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை கொடுத்துள்ளார் ஷெரில். அதுதான் அவருடைய திருமண செய்தி. ஷெரிலுக்கும் ப்ரஃபுல் டாமி என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை ஷெரிலும் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதனால் ஷெரிலின் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

More News

போராட்டக்காரர்களுக்கு கேள்வி எழுப்பிய ஆர்.ஜே.பாலாஜி

ஐபிஎல் போட்டிக்கு எதிராக நேற்று சென்னையில் அரசியல் கட்சிகள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் 257 ராணுவ வீரர்கள் பலி: அதிர்ச்சி தகவல்

அல்ஜீரியா நாட்டில் நடந்த விமான விபத்து ஒன்றில் அதில் பயணம் செய்த 257 அல்ஜீரிய நாட்டு ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க: பிரபல பாடலாசிர்யரின் கவிதை

காவிரி பிரச்சனையில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது ஆவேச கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

ரயில் மீதேறி போராட்டம் செய்த பாமக தொண்டருக்கு நேர்ந்த பரிதாபம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த போராட்டத்தால் சிலசமயம் அசம்பாவிதமும் நடந்து வரும்

சென்னை ஐபிஎல் போட்டிகள் திடீர் மாற்றம்: வெற்றியா? தோல்வியா?

சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருந்தது.