close
Choose your channels

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும்: 'ஜில்லா' பட நடிகை விருப்பம்

Wednesday, May 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’ஜில்லா’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜயின் மகன் சஞ்சய் விஜய் விரைவில் திரையுலகில் நடிகராக அல்லது இயக்குனராக அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது. கனடா நாட்டில் திரைப்பட படிப்பை முடித்துள்ள சஞ்சய் விஜய்யின் திரையுலக எண்ட்ரியை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் நடிகர் ஆனால் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என ’ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரவீனா தாஹா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜில்லா, தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த ரவீனா தாஹா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியலில் முன்னணி பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் மகனுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ரவீனா தாஹாவின் விருப்பம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment