சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ரிலீஸ் தேதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 'அரண்மனை 2' திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சித்தார்த் நடித்துள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
நடிகர் சித்தார்த் முதன்முதலில் தயாரித்து நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலேயே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ஒருசில பணிகள் முடிய தாமதமானதால் தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சித்தார்த்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
சித்தார்த், சனாத் ரெட்டி, நாசர், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீரஜ் வைத்தி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் 'ஷூட் தி குருவி' என்ற சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Here we go - #JilJungJuk will release on February 12th, 2016. So excited to bring you this picture. But first #Aranmanai2 on Jan 29:)
— Siddharth (@Actor_Siddharth) January 1, 2016
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com