சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Saturday,January 02 2016]

சுந்தர் சி இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள 'அரண்மனை 2' திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சித்தார்த் நடித்துள்ள இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.


நடிகர் சித்தார்த் முதன்முதலில் தயாரித்து நடித்துள்ள 'ஜில் ஜங் ஜக்' திரைப்படம் கடந்த கிறிஸ்துமஸ் தினத்திலேயே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் ஒருசில பணிகள் முடிய தாமதமானதால் தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சித்தார்த்தின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சித்தார்த், சனாத் ரெட்டி, நாசர், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீரஜ் வைத்தி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் 'ஷூட் தி குருவி' என்ற சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கபாலி'யில் ஜெட்லி நடிப்பது உண்மையா? படக்குழு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

வீட்டுக்கு செல்லவே விருப்பம் இல்லை : சமந்தா

இளையதளபதி விஜய்யுடன் 'தெறி', சூர்யாவுடன் '24', மகேஷ்பாபுவுடன் 'பிரம்மோத்சவம்', என ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுக்கு...

சூர்யாவின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா அமலாபால்?

பாண்டியராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பசங்க -2' திரைப்படம் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...

மரியான் பாடலை மழைக்காக மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்

தனுஷ் நடித்த 'மரியான்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஒரு பாடலின் வரியை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த பாடலின் வரிகள்...

திரைவிமர்சனம் 'மாலை நேரத்து மயக்கம் : மயங்க வைக்கும் காதல்

பிரபல இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட கீதாஞ்சலி இயக்கிய முதல் படம்தான் 'மாலை நேரத்து இயக்கம்'. முதல்படமே அதுவும் ஒரு பெண் இயக்குனரின் படம் சென்சாரில்...