சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 12 2015]

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், தனது சொந்த நிறுவனமான எடாகி எண்டர்டெயின்மெண்ட் (Etaki Entertainment) என்ற நிறுவனத்தின் மூலம் 'ஜில் ஜங் ஜக்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

சித்தார்த், சனாந்த் ரெட்டி, நாசர், ராதாரவி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீரத் வைத்தி இயக்கியுள்ளார். இவர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் 'ஜில் ஜங் ஜக்' படம் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருநாளில் தெறிக்க வைக்கும் வகையில் ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளார்.

More News

'விஜய் 60' இயக்குனர் ரேஸில் முந்தும் இயக்குனர்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில்....

அர்னால்டுக்கு போட்டியாக களமிறங்கும் 'பாகுபலி 2' வில்லன்?

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம் மற்றும் மிகப்பெரிய வெற்றி படம் என்ற பெயர் பெற்ற 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது...

விஜய் வில்லனுடன் இணையும் ராகவா லாரன்ஸ்

'காஞ்சனா 2' என்ற சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் ராகவா லாரன்ஸ் தற்போது நடிக்கவுள்ள படம் 'மொட்ட சிவா கெட்ட சிவா...

கடலூரில் விஷாலின் வெள்ள நிவாரண பணிகள்

சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக பொறுப்பேற்ற நடிகர் விஷால் காவிரி பிரச்சனை, இலங்கை தமிழ் பிரச்சனை....

2015-ல் அஜீத் படங்கள் செய்த சாதனை

2015ஆம் ஆண்டு ரிலீஸான படங்களில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் ஐந்து இடங்களில் அஜீத்......