சித்தார்த்தின் 'ஜில் ஜங் ஜக்' ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் அறிமுகமான சித்தார்த், பரத், நகுல் ஆகியோர்கள் கோலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நிலையில் சித்தார்த் பிரபல நடிகர்களில் ஒருவராக உருவாகியது மட்டுமின்றி தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அவரது எடாகி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படமே 'ஜில் ஜங் ஜக்.
தமிழக அரசின் 30% வரிவிலக்கு பெறுவதற்காக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தமிழில் டைட்டில் வைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வரிவிலக்கு தேவையில்லை என்ற கருத்தில் வித்தியாசமான டைட்டிலை சித்தார்த் தேர்வு செய்துள்ளார்.
இந்த படத்தில் நாயகி உள்பட நடிகைகளே இல்லை என்பது ஒரு சிறப்பு. முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதை 2020ஆன் ஆண்டில் நடைபெறுவதாக உள்ளது.
மேலும் சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த நாசர் மற்றும் ராதாரவி இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் ஏற்கனவே 'இனம்', அப்புச்சி கிராமம் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். குறும்படங்கள் இயக்குனர் தீரஜ் வைத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் சென்சாரில் 'யூ/ஏ' சர்டிபிகேட் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை நாளைய திரைவிமர்சனத்தில் பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments