என்னை விட்டுட்டு போயிட்டாங்கப்பா: உலகக்கோப்பை டீமை திட்டிய நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2019]

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்கவுள்ள நிலையில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல்முறையாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்றது. இந்த சரித்திர சாதனை நிகழ்வு குறித்த படம் ஒன்று '83 வேர்ல்ட் கப்' என்ற டைட்டிலில் பாலிவுட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் உலகக்கோப்பை தொடர் தொடங்கும் நாளை தொடங்கவுள்ளது என்பது ஒரு அபூர்வ ஒற்றுமை

இந்த நிலையில் இந்த படத்தில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் பங்கேற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிகர் ஜீவா நடிக்கவுள்ளார். ஆனால் நேற்று வெளியான லண்டன் சென்ற படக்குழுவினர்களின் புகைப்படத்தில் ஜீவா இல்லை.

இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜீவா, 'விட்டுட்டு போயிட்டாங்கப்பா' என்று காமெடியாக பதிலளித்துள்ளார். உண்மையில் இன்னும் சில நாட்களில் அவர் லண்டன் சென்று படக்குழுவினர்களுடன் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது