ஜீவாவின் 'போக்கிரி ராஜா' டீசர் ரிலீஸ் தேதி

  • IndiaGlitz, [Sunday,January 31 2016]

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'யான்' திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில் கடந்த ஆண்டு ஜீவா நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இந்த வருடம் ஜீவா ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.


நயன்தாராவுடன் 'திருநாள்', காஜல் அகர்வாலுடன் 'கவலை வேண்டாம்' மற்றும் ஹன்சிகாவுடன் 'போக்கிரி ராஜா ஆகிய படங்களில் தற்போது ஜீவா நடித்து வருகிறார். மூன்று படங்களுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'போக்கிரி ராஜா' படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

'போக்கிரி ராஜா' படத்தின் டீசர் நாளை அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ், மனோபாலா, மயில்சாமி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை விஜய்யின் புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமார் தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய் 60' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

'தெறி' டீசரில் உள்ள காட்சிகள். ரகசியத்தை உடைத்த ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடிப்பில் 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கியுள்ள 'தெறி' படத்தின் டீசர் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது...

'டார்லிங் 2' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதை அனைவரும் அறிவோம்...

கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்குமா லைகா நிறுவனம்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று 'வெற்றிமாறன்' இயக்கிய 'விசாரணை' படத்தின் சிறப்பு காட்சியை பார்த்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

இரண்டாவது முறையாக இணையும் சமந்தா-நித்யாமேனன்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தாலும் நடிகை சமந்தா சமீபகாலமாக இரண்டு ஹீரோயின்கள் ...