ஜீவா-நிக்கி கல்ராணியின் சாதனைக்கு ஏற்பட்ட சோதனை

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி ஜீவா, நிக்கி கல்ராணி உள்பட பலர் நடித்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2' ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் அதே தேதியில் ஜீவா, நிக்கி கல்ராணி நடித்த இன்னொரு படமான 'கீ' திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கோலிவுட் திரையுலகில் இதுவரை ஒரே நடிகர், நடிகை ஜோடியாக நடித்த இரண்டு படங்கள் கடந்த பல ஆண்டுகளாக வெளியானதில்லை என்பதால் இதுவொரு சாதனையாக கருதப்பட்டது. ஆனால் இந்த சாதனைக்கு சோதனை தரும் வகையில் 'கீ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 'கலகலப்பு 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டு முழுவீச்சில் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெற்றியை ருசிக்காமல் இருந்த ஜீவாவுக்கு இந்த இரு படங்களும் திருப்புமுனையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.