முதல்முறையாக தமிழ் படத்தில் உயிருள்ள சிம்பன்ஸி குரங்கு

  • IndiaGlitz, [Friday,December 29 2017]

நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த படத்திற்கு 'கொரில்லா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் அர்ஜூன் ரெட்டி நாயகி ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தில் உயிருள்ள நிஜ சிம்பன்ஸி குரங்கை பயன்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக 'Planet Of The Apes' படத்தில் நடித்த சிம்பன்ஸி குரங்கு போன்று தாய்லாந்தில் உள்ள விலங்குகளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு அமைப்பில் இருந்து நிஜ உயிருள்ள சிம்பன்ஸி வரவழைக்கப்படுகிறது.

இந்த படத்தின் கதை சிம்பன்ஸி குரங்கை சுற்றி வருவதால் குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன்ஸ்களுக்கு நிஜ சிம்பன்ஸியை காட்ட வேண்டும் என்ற அக்கறையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் டான்சாண்டி கூறியுள்ளார். 'காங்' என்ற பெயரை கொண்ட இந்த சிம்பன்ஸி குரங்கு தமிழ் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான விருந்தை அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரசியல், சினிமாவில் காலம் வரும்போது மாற்றமும் வரும்: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நான்காவது நாளாக கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். முன்னதாக அவர் ரசிகர்கள் முன் பேசியதாவது:

மணிரத்னத்தை அடுத்து சிம்புவுடன் இணணயும் வெற்றிப்பட இயக்குனர்

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மல்டிஸ்டார் திரைப்படம் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இன்னொரு வெற்றி பட இயக்க்குனர் தான் இயக்கும் அடுத்த படத்தில் சிம்புவை இயக்குவார்

தனுஷ் இயக்கும் 2வது படத்தில் பிரபல நடிகர்

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த 'பவர் பாண்டி' திரைப்படம் வெற்றிப்படமாக இருந்தது மட்டுமின்றி நல்ல வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் இணைந்தது.

விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம்: வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

பாரத நாட்டின் முதுகெலும்பு என்று கூறப்படும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில் விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் வழங்கப்படும்

விஜய்யை பெரிய நடிகராக்கியது நாங்கள் தான்: அபிராமி ராமநாதன்

மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்திலும், ரவி மரியா, கலக்க போகுது யாரு புகழ் குரேஷி உள்பட பலர் நடித்த 'ஆறாம் திணண' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.