close
Choose your channels

ஜீவாவின் புதிய பட டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

Thursday, August 18, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவின் மூன்று வித்தியாசமான கேரக்டரில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் இன்று ஒரு புதிய படத்திற்கு பூஜை போட்டுள்ளது.
நாடோடிகள், ஈட்டி, உள்பட பல வெற்றி படங்களை தயாரித்துள்ள இந்நிறுவனத்தின் புதிய படத்தின் டைட்டில் 'கீ'. இந்த படத்தின் நாயகனாக ஜீவாவும், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்தில் அனைகா சோடி, ஆர்ஜே பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீராகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.
பிரபல இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர் காலீஸ் இயக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அனீஸ் தருண்குமாரின் ஒளிப்பதிவில் நாகூரன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது.
இந்நிலையில் ஜீவாவின் 'திருநாள்' சமீபத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பதும், விரைவில் அவருடய அடுத்த படமான 'கவலை வேண்டாம்' ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் நாம் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment