அட்லியின் அடுத்த படத்தில் ஜீவா

  • IndiaGlitz, [Friday,February 26 2016]

ஜீவாவின் 25வது படமான 'போக்கிரி ராஜா' ரிலீஸுக்கு தயாராகி வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் 'திருநாள்' மற்றும் 'கவலை வேண்டாம்' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சத்தமின்றி அடுத்த படத்திலும் கமிட் ஆன ஜீவா, அந்த படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் அட்லியின் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஜீவா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பழநி அருகே ஆரம்பமாகியுள்ளதாகவும், அந்த பகுதியில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. இந்த படத்திலும் 'கவலை வேண்டாம்' படத்திலும் ஜீவா மாறி மாறி நடித்து வருவதாக கூறப்படுகிறது.