ஜீவாவின் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,August 10 2016]

ஜீவா நடித்த 'திருநாள்' கடந்த வாரம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில், 'திருநாள்' படத்தின் அதே தயாரிப்பாளர் மீண்டும் ஜீவா நடிப்பில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற படத்தை தயாரிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க லட்சுமிமேனனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தற்போது விஜய்சேதுபதியுடன் 'ரெக்க' படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்றுள்ள லட்சுமிமேனன், சென்னை திரும்பியதும் இந்த படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தை ஜே.எம்.அருண் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.