காஜல் அகர்வாலை ஒரு மாதத்தில் முந்திய நயன்தாரா

  • IndiaGlitz, [Wednesday,July 20 2016]

ஜீவா, காஜல் அகர்வால் நடித்த 'கவலை வேண்டாம்' திரைப்படம் வரும் ஆயுதபூஜை விடுமுறை தினமான அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று வெளியான செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் அதற்கு முன்னதாக ஜீவா நடித்த இன்னொரு படமான 'திருநாள்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
'ஈ' படத்தை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீவா-நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் 'திருநாள்'. பிளேடு கணேசன் என்ற கிராமத்து ரவுடி இளைஞனாக ஜீவாவும், வித்யா என்ற டீச்சர் கேரக்டரில் நயன்தாராவும் நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 5 என்ற தகவல் வெளியாகியுள்ளது. காஜல் அகர்வாலுடன் ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' திரைப்படத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நயன்தாராவுடன் ஜீவா நடித்த 'திருநாள்' ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொலைக்காட்சி புகழ் கோபிநாத், ஜி.மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் மகேஸ்வரி முத்துசாமி ஒளிப்பதிவில் வி.டி.விஜயன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.செந்தில்குமார் தயாரித்துள்ளார். கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய வெற்றியை ருசிக்காத ஜீவா, இந்த படத்தின் மூலம் மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.