ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதும் தமிழ்ப்படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக ஒரு தமிழ் படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது, மற்ற படங்கள் வெளியாகாது என்பதும், தியேட்டர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து மற்ற படங்கள் வெளியாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இருப்பினும் சில படங்கள் தைரியமாக மாஸ் நடிகர்களின் படங்களுடன் வெளியாகி வருகின்றன என்பதும், குறிப்பாக சமீபத்தில் கூட ’இந்தியன் 2’ படம் வெளியானபோது பார்த்திபனின் ’டீன்ஸ்’ படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் அக்டோபர் 10ஆம் தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி ஜீவா நடித்த ’பிளாக்’ என்ற திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜீவா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
ஜீவா, பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Time’s up! #BLACK is set to release in theatres on October 11. Get ready to witness a thrilling journey… @JiivaOfficial @priya_Bshankar @kgBalasubramani @actorvivekpra #ShivaShahra @iamswayamsiddha @gokulbenoy @SamCSmusic @madhankarky @ArtSathees @philoedit #MetroMagesh… pic.twitter.com/SSZm4nB0cC
— Jiiva (@JiivaOfficial) October 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments