உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியனை சந்தித்த நடிகர் ஜீவா!
- IndiaGlitz, [Monday,April 08 2019]
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாள் கடந்த 1983ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி. அன்றுதான் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி பாலிவுட்டில் '83 தி மூவி' என்ற பெயரில் திரைப்படமாகி வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் '83 தி மூவி' திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இந்த படத்தில் கிருஷ்ணாமாச்சாரி ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடித்த நடிகர் ஜீவா, இந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் கபில்தேவ், பல்விந்தர் சிங் சந்து உள்பட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த படத்தில் கபில்தேவ் கேரக்டரில் ரன்வீர்சிங், கவாஸ்கர் கேரக்டரில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் கேரக்டரில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் கேரக்டரில் அம்மிவிரிக், ஸ்ரீகாந்த் கேரக்டரில் ஜீவா, கிர்மானி கேரக்டரில் சாஹில் கட்டார், வெங்கசர்க்கார் கேரக்டரில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி கேரக்டரில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கபீர்கான் இயக்கிய இந்த படம், 'தோனி' திரைப்படம் போல் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.