அஜித்துடன் ஆரம்பம், ஜீவாவுடன் முடிவு. காஜல் அகர்வால்

  • IndiaGlitz, [Sunday,July 31 2016]

தல அஜித் நடிக்கவுள 'தல 57' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்றுவிட்ட நிலையில் இந்த படத்தின் நாயகியாக உறுதி செய்யப்பட்ட காஜல் அகர்வால் விரைவில் பல்கேரியா சென்று படக்குழுவினர்களுடன் கலந்து கொள்ளவுள்ளார்
இந்த படத்தில் காஜல் அகர்வால் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளதாகவும், இதுவரை அவர் நடித்திராத குடும்பப்பாங்கான அமைதியான கேர்கடரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படத்தில் ஒரு வித்தியாசமான காஜலை பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜீவாவுடன் காஜல் கார்வால் நடித்து வந்த 'கவலை வேண்டாம்' படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துவிட்டது. அஜித் படத்தின் கேரக்டருக்கு நேர்மாறாக படுசுட்டியான பெண்ணாக காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதை அடுத்து விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

More News

வெங்கட்பிரபுவுடன் இணைந்த 'கபாலி' நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினிக்கு அடுத்தபடியாக பாசிட்டிவ் விமர்சனம் பெற்றவர் தன்ஷிகா. அதிரடி...

சிம்புவின் 'AAA' படத்தில் மேலும் ஒரு பழம்பெரும் நடிகர்

சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின்...

'தல 57' படத்தில் எத்தனை ஹீரோயின்கள்

அஜித் நடிக்கவுள்ள 57வது படமான 'தல 57' படத்தில் இரண்டு நாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகி காஜல் அகர்வால்...

'கபாலி'யுடன் கனெக்ஷன் ஆன 'தர்மதுரை'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படம் இரண்டாவது ஹவுஸ்புல் வாரமாக திரையரங்குகளில்...

'கபாலி 2' சாத்தியமா? ரஞ்சித்- தாணு தகவல்

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' திரைப்படத்தின் கிளைமாக்ஸ்...