தேசிய விருது பெற்ற பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஜீவா

  • IndiaGlitz, [Friday,February 16 2018]

கடந்த 2016ஆம் ஆண்டு பிரபல பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதையும் பெற்றது. இந்த நிலையில் ராஜுமுருகன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோ அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜூமுருகனின் அடுத்த படத்தின் டைட்டில் 'ஜிப்சி' என்றும் இந்த படத்தில் ஹீரோவாக ஜீவா நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் பா.ரஞ்சித், எச்.வினோத், எஸ்.ஆர்.பிரபு உள்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்

சந்தோஷ் நாராயணன் இசையில், செல்வகுமார் ஒளிப்பதிவில் ரெய்மண்ட் டெர்ரிக் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு சி.எஸ்.பாலசந்தர் கலை இயக்குனராக பணியாற்றவுள்ளார். ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது.

More News

கமல் கட்சியில் சேருகிறாரா டி.என்.சேஷன்?

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் பல விஐபிக்கள் அன்றைய தினம் இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

லெஸ்பியன் ஆகும் ஓவியா: ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3', மற்றும் 'களவாணி 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

காவிரி தீர்ப்பு: கமல்ஹாசனின் ரியாக்சனும், ரஜினியின் மெளனமும்

பல வருடங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு இடையே இருந்து வந்த காவிரி பிரச்சனைக்கு ஒருவழியாக இன்று இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

விமல் லட்சியத்தை உடைத்தாரா வரலட்சுமி? கலகலப்பாக உருவாகும் ' கன்னிராசி'

நடிகர் விமல் நடித்த 'மன்னார் வகைறயா' ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'கன்னிராசி

முடிவுக்கு வந்தது தனுஷின் மாஸ் கேங்க்ஸ்டர் திரைப்படம்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல்பாக படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.