உலகத்துல ரெண்டே ரகம் தான்.. ஒண்ணு மாட்னவன், இன்னொன்னு மாட்டாதவன்.. 'வரலாறு முக்கியம்' டிரைலர்

  • IndiaGlitz, [Sunday,November 27 2022]

ஜீவா நடிப்பில் உருவான 'வரலாறு முக்கியம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் ரொமான்ஸ் மற்றும் காமெடி அம்சங்கள் கலந்துள்ளன என்பதும் ஜீவா இந்த படத்தில் ஒரு ரொமான்ஸ் நாயகனாக நடித்துள்ளார் என்பதும் தெரியவருகிறது.

இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் விடிவி கணேஷ் நடித்துள்ள நிலையில் அவரது காமெடி இந்த படத்தில் மிகச் சிறப்பாக உள்ளது என்பது டிரைலரில் இருந்து தெரிகிறது .

மேலும் ஜீவா ஜோடியாக காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் நடித்திருக்க மேலும் கேஎஸ் ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உதயநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான புதிய படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

நடிகரும், தயாரிப்பாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வந்தோம்.

பிரபல சூப்பர் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் - நிதி அகர்வால்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் மற்றும் சமீபத்தில் வெளியான உதயநிதியின் 'கலகத்தலைவன்' என்ற படத்தில் நாயகியாக நடித்த நிதி அகர்வால் ஆகிய இருவரும் பிரபல சூப்பர் ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது 

இந்த இரண்டு பேரும் குரூப்பிஸம் வச்சுருக்காங்க.. கமல் முன் குற்றஞ்சாட்டிய அசீம்

மைனா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் குழுவாக செயல்படுகிறார்கள் என கமல் ஹாசன் முன் அசீம் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஷாலினி அஜித்.. முதல் போஸ்ட் என்ன தெரியுமா?

 நடிகர் அஜித் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதும் அநேகமாக எந்த சமூக வலைதளங்களிலும் இல்லாத ஒரே மாஸ் நடிகர் அஜித் ஆகத்தான் இருக்கும்

'கேஜிஎப்' தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ் படத்தில் பிரபல நடிகை!

'கேஜிஎப்' படத்தின்  தயாரிப்பு நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது