close
Choose your channels

தோத்துருவோம்ன்னு நினைச்சு விளையாடக்கூடாது: கொரில்லா டிரைலர் விமர்சனம்

Friday, May 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜீவா நடிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் காமெடி த்ரில்லர் படமான 'கொரில்லா' படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

கடந்த் இரண்டு நாட்களாக உலக அளவில் டிரெண்டில் இருந்த நேசமணிக்காக பிரேயர் செய்யுங்கள் என்ற டைட்டிலுடன் ஆரம்பமாகும் இந்த டிரைலர் 'நாம வாழ்ற வாழ்க்கையில நாம தேட்றது கிடைக்கலைன்னா, நம்மள தேடி வர்ற வாழ்க்கையை நாம் ஏன் தேர்ந்தெடுக்க கூடாது' என்ற வசனத்துடன் தொடங்குகிறது.

ஷாலினி பாண்டேவுடன் முதல் வசனமே 'ஜிப்பை கழட்டுங்க' என்று பேசும் ஜீவா, இன்னும் ரொமான்ஸ் நாயகன் என்பதை நிருபிக்கின்றார். ஜீவா, ஷாலினி பாண்டே காதலுக்கு இடையே கொரில்லா எண்டர் ஆனவுடன் தான் படம் காமெடி பக்கம் திரும்புகிறது போல் தோன்றுகிறது. கொரில்லா வேஷம் போட்டு ஜீவா, சதீஷ் உள்பட மூவர் பணத்தை கொள்ளையடிக்க செல்லும்போது நடக்கும் காமெடி சம்பவங்கள் இந்த படத்தின் கதை என தெரிகிறது.

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் காமெடி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்போல் தெரிகிறது. கேமை தோத்துருவோம்ன்னு நினைச்சு விளையாட கூடாது, தோற்கக்கூடாதுன்னு நினைச்சு விளையாடனும் போன்ற கொஞ்சம் சீரியஸான வசனங்களும், 'நீங்க மிக்சரை கண்டினியூ பண்ணுங்க' போன்ற அரசியல் நையாண்டி வசனங்களும் இந்த படத்தில் இடம்பெறுகிறது. மொத்தத்தில் இந்த படமாவது ஜீவாவுக்கு வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment