பா.ரஞ்சித் கலை நிகழ்ச்சியில் ஜிக்னேஷ் மேவானி ஆவேச பேச்சு

  • IndiaGlitz, [Saturday,December 29 2018]

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் 'வானம்' கலை நிகழ்ச்சி இன்று முதல் மூன்று நாட்கள் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெறுகிறது. இந்த கலை நிகழ்ச்சியில் குறு நாடகங்கள், பொம்மலாட்டம், நாடகம், தெருக்கூத்து, பறை இசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்த கலைநிகழ்ச்சியின் தொடக்க நாளான இன்று குஜராத் மாநிலத்தின் எம்.எல்.ஏவும், சமூக போராளியுமான ஜிக்னேஷ் மேவானி கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:

ஜாதியை ஒட்டு மொத்தமாக குப்பைத் தொட்டியில் எறிய வேண்டும் என்றும், மதச்சார்பற்ற சமூகத்தை மதிக்கும் நிலையில் அரசில் உள்ளவர்கள் இல்லை என்றும், சாதி ரீதியாக தான் எல்லாம் இன்றும் நடந்து வருவதாகவும் ஆவேசமாக தெரிவித்தார்.

More News

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த கமல்ஹாசன் திரைப்படம்

வரும் பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

வங்கிக்கணக்கு முடக்கம் குறித்து மகேஷ்பாபு விளக்கம்

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் வங்கிக்கணக்கை நேற்று ஜிஎஸ்டி அதிகாரிகள் முடக்கியதாகவும், அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரி செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

பிரமாண்ட இயக்குனரின் மகன் திருமண நிகழ்ச்சியில் அனுஷ்கா

இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி ' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

அமெரிக்காவில் புது உற்சாகத்துடன் கேப்டன்: வைரலாகும் புகைப்படங்கள்

தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்கா சென்றிருந்தார் என்பதும்,

தமிழகம் எனக்கு செய்த உதவி: சென்னை விழாவில் தல தோனி பேச்சு

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் எழுதிய 'காபி டேபிள் என்ற' புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.