குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள நடிகை பிரியாவாரியாரின் ஒரே ஒரு கண்ணசைவும், புருவ நடனமும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் குஜராத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானியையும் பிரியாவாரியரின் கண்ணசைவு தாக்கம் விட்டுவைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இன்றைய காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்த ஜிக்னேஷ் மேவானி, “காதலர் தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு, வைரல் ஹிட்டான ‘மணிகியா மலராய பூவி’ பாடல்தான் பதில். இந்தியர்கள் ஒருவரை வெறுப்பதை விட ஒருவரை நேசிப்பதைதான் அதிகம் விரும்புகின்றனர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டனர். இந்த அழகான வீடியோவை ரசியுங்கள்,” என்று தெரிவித்து பிரியாவாரியரின் வீடியோவையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சினிமா ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் கவர்ந்துவிட்ட பிரியாவாரியருக்கு இன்னும் எங்கெங்கிருந்து பாராட்டுக்கள் குவியப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com