close
Choose your channels

நானும் ஒரு காலா' தான்: ஜிக்னேஷ் மேவானி பெருமிதம்

Tuesday, June 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் கடந்த 7ஆம் தேதி பலவிதமான தடைகளை உடைத்து வெளியான திரைப்படம் 'காலா'. இந்த படத்திற்கு முதல் காட்சியில் இருந்தே வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக ரஞ்சித்தின் புரட்சிகரமான கருத்துக்கள், ரஜினியின் அனுபவமிக்க நடிப்பு, ஒடுக்கப்பட்டோர்களுக்கான குரல் என இந்த படம் பல செய்திகளை மக்களுக்கு தந்ததாக கூறப்படுகிறது.

ரஜினி ரசிகர்கள், நடுநிலை பார்வையாளர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் திரையுலக பிரமுகர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மாநில தேர்தலில் பாஜகவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஜிக்னேஷ் மேவானி. குஜராத் மாநில ஒடுக்கப்பட்டோர்களுக்காக குரல் கொடுத்து வரும் இவர் இந்த படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ரஞ்சித்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஜிக்னேஷ் இந்த படம் குறித்து கூறியதாவது:

நேற்று 'காலா' படத்தை பார்த்த பின்னர் தான், நானும் ஒரு 'காலா' என்பதை உணர்ந்தேன். மிகச்சிறந்த படம். சகோதரர் ரஞ்சித் 'கபாலி'க்கு பின்னர் மீண்டும் ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். ஜிக்னேஷ் மேவானியின் பாராட்டால் ரஞ்சித் உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment