இண்டர்நெட் இல்லை, ஸ்மார்ட்போன் இல்லை: ஸ்பீக்கர் வைத்து பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர்

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் திறக்கவில்லை என்பதும், தற்போது ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே. ஆனால் ஆன்லைன் மூலம் பாடங்களை கவனிக்க மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் அல்லது கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் அவசியம் தேவை. இவை இரண்டும் இருந்தால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று பாடங்களை கவனிக்க முடியும்.

இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள பங்கத்தி என்ற கிராமத்தில் உள்ள பள்ளியிலும் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்த அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் முடிவு செய்தனர். ஆனால் அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை. அதுமட்டுமின்றி அக்கிராமத்தில் சரியான இன்டர்நெட் வசதியும் இல்லை.

இதனை அடுத்து அந்த கிராமத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டன. பள்ளியில் இருந்து கொண்டே ஆசிரியர்கள் மைக் மூலம் காலை 10 மணி முதல் இரண்டு மணி நேரம் பாடங்களை நடத்தினர். அந்த பாடங்களை மாணவர்கள் ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கர் மூலம் கேட்டு படித்து வந்தனர்.

மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் ஏதாவது ஒரு மொபைல் போனிலிருந்து ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த சந்தேகங்களுக்கு மறுநாள் மைக் மூலம் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் இந்த புத்திசாலித்தனமான ஐடியாவால் அந்த கிராமத்து மாணவர்கள் பாடங்களை படித்து வருவதாகவும் அந்த கிராமத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக் கட்டி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவது குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

More News

லாட்ஜில் எடுத்த ரகசிய வீடியோ: மயிலாப்பூர் இளம்பெண்ணின் பகீர் புகார்

தன்னை உயிருக்கு உயிராக காதலித்த காதலருடன் லாட்ஜில் ரூம் போட்டு தங்கி ஜாலியாக இருந்ததாகவும், அப்போது எடுத்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பதிவு செய்து காதலன் தன்னை மிரட்டுவதாகவும்

கொரோனா உயிரிழப்பு: ஜேசிபி வாகனத்தைக் கொண்டு உடலை அகற்றிய அவலம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை உலகச் சுகாதார நிறுவனம் நெறிப்படுத்தி வழங்கியிருக்கிறது.

செங்கல்பட்டு, மதுரையில் கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு: சொந்த ஊர் சென்றவரகள் கலக்கம்

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னையை காலி செய்து விட்டு அவரவர் சொந்த ஊருக்கு

சாத்தான் குளம் வற்றலாம்! ஆனால் நீதிக்குளம் வற்றக்கூடாது: பிரபல நடிகரின் டுவீட்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் என்ற பகுதியில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகியோர் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட சில நிமிடங்கள் அதிக நேரம் கடை

கொசு கடித்தால் கொரோனா வருமா??? அதிர்ச்சி ஏற்படுத்தும் புது ஆய்வுத் தகவல்!!!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அதன் அறிகுறிகள், நோய்த் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.