வைரலாகும் நடிகை ஜான்வி கபூர் நீச்சல் உடை… விலையை அலசும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட் நட்சத்திரத் தம்பதிகளான போனி கபூர்- மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவராக இருந்துவருகிறார். மேலும் அவருடைய கதைத்தேர்வை பார்த்து பல முன்னணி பிரபலங்களே வியந்துபோகும் அளவிற்கு அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தேர்வுசெய்து நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ஜான்வி தனது பிசியான நடிப்பிற்கு மத்தியில் வொர்க் அவுட் விஷயத்திலும் அதிக அக்கறை காட்டிவருகிறார். அதோடு ஊர்ச்சுற்றுவதிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் சோஷியல் மீடியா பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் இன்ஸ்டாவில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மஞ்சள் நிறத்தில் பிகினி அணிந்து நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை ஜான்வி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்குகளை குவித்த நிலையில் சில நெட்டிசன்கள் அவர் அணிந்திருந்த நீச்சல் உடையின் விலை குறித்தும் அலசி வருகின்றனர்.

ஒருவழியாக நடிகை ஜான்வி அணிந்திருந்த நீச்சல் உடையானது Zimmermann’s Resort Swim கலெக்ஷனுக்குச் சொந்தமானது எனக் கண்டுபிடித்த நெட்டிசன்கள் அதன் விலை 235 அமெரிக்க டாலர் என்றும் இந்திய மதிப்பில் 17,514 ரூபாய் என்பதையும் கமெண்ட்ஸகளில் பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் நடிகை ஜான்வி கபூரின் ரசிகர்கள் செய்த இந்த காரியம் தற்போது வைரலாகி வருகிறது.