அம்மாவுக்கு பிடித்த இடம்.. சென்னையில் உள்ள கோவிலுக்கு விசிட் அடித்த ஜான்வி கபூர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது அம்மாவுக்கு பிடித்த சென்னையில் உள்ள கோவிலுக்கு முதல் முறையாக வந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் பிரபல திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் திடீரென காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டு மகள்களும் நடிகையாக அறிமுகமாகி திரையுலகில் ஜொலித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் குறிப்பாக மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் மட்டும் இன்றி தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ஜான்வி கபூர் நடித்த ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக உள்ளார்.
இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியை காண ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ படத்தின் நாயகன் ராஜ்குமார் உடன் வந்திருந்த ஜான்வி கபூர், சேப்பாக்கத்தில் ஐபிஎல் கொண்டாட்டம் முடிந்த பிறகு சென்னையில் உள்ள முப்பாத்தம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்
நடிகை ஸ்ரீதேவியின் உறவினர் மகேஸ்வரி ஐயப்பனுடன் அவர் முப்பாத்தம்மன் கோயிலில் தரிசனம் செய்த நிலையில் தனது அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம் என்று உருக்கமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments