2 வருட பயிற்சி.. தோள்பட்டை வலி.. ஒரு திரைப்படத்திற்காக இந்த அளவு ரிஸ்க் எடுத்தாரா ஜான்வி கபூர்?

  • IndiaGlitz, [Thursday,May 23 2024]

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு திரைப்படத்திற்காக இரண்டு வருடங்கள் பயிற்சி மற்றும் தோள்பட்டையில் வலி ஆகியவற்றை அனுபவித்ததாக கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை என்பதும் கடந்த ஆறு ஆண்டுகளில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தற்போது அவர் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ என்ற கிரிக்கெட் விளையாட்டு சம்பந்தமான திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனை மஹி என்ற மஹிமா கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த கேரக்டரில் இயல்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி செய்ததாகவும் அப்போது அவருக்கு தோள்பட்டை வலி உட்பட பல்வேறு சவால்கள் ஏற்பட்ட நிலையில் அவர் அதையெல்லாம் மீறி சிறப்பாக பயிற்சி கொண்டு அதன் பிறகு இந்த படத்தில் நடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு திரைப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் பயிற்சி எடுத்து கிரிக்கெட் விளையாட்டை பழகி நடித்த ஜான்வி கபூருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர், ராஜேஷ் சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

சுந்தர் சியின் 'கலகலப்பு 3' படத்தின் ஹீரோயின் இவரா? ஆச்சரிய தகவல்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'கலகலப்பு' மற்றும் 'கலகலப்பு 2' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் அவர் 'கலகலப்பு 3' படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும்.. பிக்பாஸ் நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..!

ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும் என்று பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் நாட்களை எண்ணும் கணவர்.. ஸ்ரீதேவி அசோக்கின் க்யூட் வீடியோ..!

சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது கர்ப்பமான வயிற்றில் உள்ள டி-ஷர்ட்டில் கணவர் நாட்களை என்னும் வகையில் குறியீடு செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி

'சிறகடிக்க ஆசை' மலேசியா மாமா 40 சீரியல் இயக்கி உள்ளாரா? 70 வயதிலும் பிசி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் மலேசியா மாமா கேரக்டரில் நடித்தவர், 40 சீரியல் இயக்கி இருப்பதாகவும் பல சீரியலில் ஸ்கிரிப்ட் எழுதி உள்ளதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில்

வரும் தீபாவளிக்கு 5 பிரபலங்களின் படங்கள் ரிலீஸா? எந்தெந்த படங்கள் பின்வாங்கும்?

2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ஐந்து பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் சில படங்கள் பின்வாங்குமா? அல்லது ஐந்துமே தீபாவளி