எங்க அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்க.. ஸ்ரீதேவி மகள் நெகிழ்ச்சி பேச்சு..!

  • IndiaGlitz, [Wednesday,September 18 2024]

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த ’தேவாரா’ என்ற படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜான்வி பேசியபோது என் அம்மாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவை எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், ’தேவாரா’ படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடைபெற்ற போது, படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஜான்வி கபூர் இந்த விழாவில் பேசியதாவது, எனக்கு சென்னை என்றாலே மிகவும் ஸ்பெஷல். என் அம்மாவுடன் இருந்த சிறந்த நினைவுகள் அனைத்தும் சென்னையில் தான். உங்கள் அனைவரின் அன்பின் காரணமாகவே நானும் என் குடும்பத்தினரும் நல்லபடியாக இருக்கின்றோம். அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, ஹைதராபாத்தில் எனது மிக நல்ல நண்பர் ஜூனியர் என்டிஆர் என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய எனர்ஜியும், அவருடைய எனர்ஜியும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஒரு ரசிகராக, இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன், என்று கூறினார்.

ஜூனியர் என்டிஆர் பேசிய போது, தமிழில் எனக்கு விருப்பமான இயக்குனர் வெற்றிமாறன். அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிய விரும்புகிறேன், என்று தெரிவித்தார்.

 

More News

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.. ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்தவர்..!

பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா நேற்று காலமானதாக அவரது மகள் தெரிவித்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 84.

மகளை விட அம்மாவுக்கு டிரஸ் குறைச்சலா இருக்குது.. பிக்பாஸ் ஷிவானி வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில்

முதல்வர் ஸ்டாலினை அமெரிக்காவில் சந்தித்த தமிழ் நடிகர்.. குடும்பத்துடன் எடுத்த புகைப்படம்..!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக சென்றிருந்த நிலையில், அங்கு அவரை தமிழ் நடிகர் ஒருவர் குடும்பத்துடன் சந்தித்த புகைப்படம் இணையத்தில்

'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு.. 'விடாமுயற்சி' அறிவிப்பு எப்போது?

அஜித் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும்

'வேட்டையன்' படத்தின் மஞ்சு வாரியர் கேரக்டர்.. மாஸ் வீடியோவை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம்