close
Choose your channels

எங்க அம்மாவுக்கு கொடுத்த அன்பை எனக்கும் கொடுங்க.. ஸ்ரீதேவி மகள் நெகிழ்ச்சி பேச்சு..!

Wednesday, September 18, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த ’தேவாரா’ என்ற படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜான்வி பேசியபோது "என் அம்மாவுக்கு நீங்கள் அளித்த ஆதரவை எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில், கொரட்டாலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ’தேவாரா’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இந்த நிலையில், ’தேவாரா’ படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடைபெற்ற போது, படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஜான்வி கபூர் இந்த விழாவில் பேசியதாவது, "எனக்கு சென்னை என்றாலே மிகவும் ஸ்பெஷல். என் அம்மாவுடன் இருந்த சிறந்த நினைவுகள் அனைத்தும் சென்னையில் தான். உங்கள் அனைவரின் அன்பின் காரணமாகவே நானும் என் குடும்பத்தினரும் நல்லபடியாக இருக்கின்றோம். அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும் போது, "ஹைதராபாத்தில் எனது மிக நல்ல நண்பர் ஜூனியர் என்டிஆர் என்பதில் சந்தேகம் இல்லை. என்னுடைய எனர்ஜியும், அவருடைய எனர்ஜியும் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஒரு ரசிகராக, இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்," என்று கூறினார்.

ஜூனியர் என்டிஆர் பேசிய போது, "தமிழில் எனக்கு விருப்பமான இயக்குனர் வெற்றிமாறன். அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிய விரும்புகிறேன்," என்று தெரிவித்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment