டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் புத்தம் புதிய வெப் சீரிஸ் - "ஜான்சி"
Send us your feedback to audioarticles@vaarta.com
பல தரமான வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வழங்கும் ஒரு புதிய வெப் சீரிஸ் - "ஜான்சி"
அஞ்சலி, கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் திரு அவர்களின் சிறப்பான இயக்கத்தில் விறுவிறுப்பான கதையும், முழு நீள பொழுதுபோக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் அநீதிகளையும், போதைப் பொருட்களின் தாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான கதை, "ஜான்சி".
ஓர் களங்கமில்லா மனது கொண்ட சராசரி பெண்ணான ஜான்சியின் வாழ்க்கையில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை மற்றும் எதிர்பாராத திருப்பங்களை, அதிரடி ஆக்ஷ்னுடனும் உணர்ச்சிப்பூர்வமான காட்ச்சிகளுடனும் சொல்லும் தொடர், "ஜான்சி".
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் விறுவிறுப்பான தொடரில், நினைவுகளை இழந்து தவிக்கும் ஜான்சிக்கு தான் யார், தனது கடந்த காலம் என்ன என்று தெரிந்து கொள்ள கட்டாயம் ஏற்படுகிறது. அழகான குடும்பத்தில் மனைவியாகவும், தாயாகவும் இருக்கும் ஜான்சியின் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படுகிறது. அவ்வப்போது வரும் நினைவலைகளின் மூலம் தனக்கு மோசமான கடந்த காலமும் அதில் முகம் தெரியாத எதிரிகளும் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறாள் ஜான்சி.
ஜான்சி அவள் கடந்த காலத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்கிறாளா? அவளுக்கு நடந்த அக்கிரமங்களை பற்றி தெரிந்து கொள்கிறாளா? அதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டு பிடித்து பழி தீர்த்துக் கொள்கிறாளா?
இத்தகைய பல கேள்விகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பார்வையாளர்களின் மனதை ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது. இக்கேள்விகளுக்குண்டான பதில்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் "ஜான்சி" எனும் விறுவிறுப்பான தொடரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
"ஜான்சி" - புத்தம் புதிய வெப் சீரிஸ் - டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!: https://bit.ly/3swt5qr
Content Produced by: Indian Clicks, LLC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments