டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் புத்தம் புதிய வெப் சீரிஸ் - "ஜான்சி"

  • IndiaGlitz, [Thursday,October 27 2022]

பல தரமான வெப் சீரிஸ்களையும், திரைப்படங்களையும் வழங்கி வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அடுத்ததாக வழங்கும் ஒரு புதிய வெப் சீரிஸ் - ஜான்சி

அஞ்சலி, கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் திரு அவர்களின் சிறப்பான இயக்கத்தில் விறுவிறுப்பான கதையும், முழு நீள பொழுதுபோக்கும் உள்ள சுவாரஸ்யமான தொடர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் அநீதிகளையும், போதைப் பொருட்களின் தாக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவான கதை, ஜான்சி.

ஓர் களங்கமில்லா மனது கொண்ட சராசரி பெண்ணான ஜான்சியின் வாழ்க்கையில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளை மற்றும் எதிர்பாராத திருப்பங்களை, அதிரடி ஆக்ஷ்னுடனும் உணர்ச்சிப்பூர்வமான காட்ச்சிகளுடனும் சொல்லும் தொடர், ஜான்சி.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் விறுவிறுப்பான தொடரில், நினைவுகளை இழந்து தவிக்கும் ஜான்சிக்கு தான் யார், தனது கடந்த காலம் என்ன என்று தெரிந்து கொள்ள கட்டாயம் ஏற்படுகிறது. அழகான குடும்பத்தில் மனைவியாகவும், தாயாகவும் இருக்கும் ஜான்சியின் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படுகிறது. அவ்வப்போது வரும் நினைவலைகளின் மூலம் தனக்கு மோசமான கடந்த காலமும் அதில் முகம் தெரியாத எதிரிகளும் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறாள் ஜான்சி.

ஜான்சி அவள் கடந்த காலத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்கிறாளா? அவளுக்கு நடந்த அக்கிரமங்களை பற்றி தெரிந்து கொள்கிறாளா? அதற்கு காரணமாக இருந்தவர்களை கண்டு பிடித்து பழி தீர்த்துக் கொள்கிறாளா?

இத்தகைய பல கேள்விகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பார்வையாளர்களின் மனதை ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது. இக்கேள்விகளுக்குண்டான பதில்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் ஜான்சி எனும் விறுவிறுப்பான தொடரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஜான்சி - புத்தம் புதிய வெப் சீரிஸ் - டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்!!: https://bit.ly/3swt5qr

Content Produced by: Indian Clicks, LLC

More News

இதெல்லாம் ரொம்ப நக்கலு.. ஷெரினுக்கு வீடியோ வெளியிட்ட நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கின் மூலம் பல போட்டியாளர்களின் உண்மை சொரூபம் தெரிந்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக ஒருசில போட்டியாளர்கள் தாங்கள் யார்

அடுத்த வாரத்தில் இருந்து சும்மா வெடிக்கும் பட்டாசுகள்:  'வாரிசு' படக்குழுவின் திட்டம் இதுதான்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் சூப்பர் ஸ்டில் ஒன்று கடந்த தீபாவளி அன்று வெளியானது என்பதும் அந்த ஸ்டில்லில் அடுத்த வாரம் முதல் பட்டாசு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது

எங்க கை வச்சு தள்றான் தெரியுமா என்னை? ஆவேசமாகும் தனலட்சுமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க்கில் இரண்டு குழுவினராக பிரிந்து ஒருவருக்கொருவர் மோதி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

பாஜக பெண் தலைவர் மீது புகார் அளித்த சினேகன்: வழக்குப்பதிவு செய்த போலீசார்!

தமிழக பாஜகவின் மாநில துணை தலைவர் மீது பாடலாசிரியர் சினேகன் புகார் அளித்துள்ள நிலையில் அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'அவளுக்கு பழசெல்லாம் ஞாபகம் வராதவரைக்கும் ஆபத்து இல்லை': அஞ்சலியின் 'ஜான்சி' டிரைலர்

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான அஞ்சலி நடித்த 'ஜான்சி' என்ற வெப்தொடர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதன் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.