தமிழின் முதல் 'ஸ்டார் வார்ஸ்' டைப் படத்தில் ஜெயம் ரவி

  • IndiaGlitz, [Saturday,April 02 2016]
ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மிருதன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தமிழின் முதல் ஜோம்பி திரைப்படமான இந்த படத்தை இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இந்த புதிய படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

'மிருதன்' தமிழின் முதல் ஜோம்பி படம் என்ற பெருமையை பெற்றதுபோலவே, தமிழில் வெளிவரும் முதல் 'ஸ்டார் வார்ஸ்' படம் போல ஒரு ஸ்பேஸ் சம்பந்தப்பட்ட படத்தைத்தான் சக்தி செளந்திரராஜன், ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து இயக்கவுள்ளாராம். இந்த படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
'நாய்கள் ஜாக்கிரதை', 'மிருதன்' என இரண்டு வித்தியாசமான படங்களை கொடுத்த சக்தி செளந்திரராஜன் நிச்சயம் இந்த படத்தையும் வித்தியாசமாக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.