வடிவேல் பட பாணியில் .....! நகைகளை திருடியே புதிய நகைக்கடையை துவங்கிய திருடன்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர், நகைகளை திருடியே 'பாலாஜி கோல்ட் ஹவுஸ்' என்ற கடையை துவங்கியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கொளத்தூரில் 25 லட்சம் மதிப்புள்ள நகைக்கடையை 'பாலாஜி கோல்ட் ஹவுஸ்' என்ற பெயரில் ஒருவர் துவங்கியுள்ளார். இவர் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து கொண்டே, சிறுக சிறுக நகைகளை திருடி புதிதாக கடை திருந்திருப்பதாக, புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, நம்மாழ்வார் பேட்டையில், ஒத்தவாடை என்ற தெருவில் "சுகன் ராஜ்மேத்தா கோல்டு ஹவுஸ்" என்ற கடை இயங்கி வருகிறது. இதை ரஞ்சித்குமார் மற்றும் அவரின் சகோதரர்கள் இணைந்து நடத்தி வந்துள்ளனர். அவர்களின் தகப்பனார் காலத்தில் இருந்து சுமார் 40 வருடங்களாக இயங்கி வரும் இந்தக்கடையில், 15 வருடங்களாக ராஜஸ்தானை சேர்ந்த வீரேந்தர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். நகைக்கடை உரிமையாளர்களின் குடும்பத்திற்கு வீரேந்தர், குடும்ப உறுப்பினர் போல நம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார். இதனால் நகைக்கடை லாக்கரின் சாவியை அவரிடம் கொடுத்துள்ளனர். ஆனால் திடீரென மக்கள் அடகுவைக்கும் நகைகள் குறைந்து வந்துள்ளது.
இதன் காரணமாக சந்தேகமடைந்த ரஞ்சித் புதிதாக வாங்கி வந்த நகைகளை, அடகு வைக்க வீரேந்தரிடம் கொடுத்துள்ளனர். சில நாட்கள் கழித்து தங்க நகை லாக்கரை திறந்து பார்த்த போது, அதிலிருந்து ஒரு செயின் திருடப்பட்டிருந்தது. இதனால் சகோதரர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தான் திருடியது தவறு என ஒப்புக்கொண்டுள்ளார். 25 லட்சம் மதிப்புள்ள தங்கள் நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை, பல வருடங்களாக இங்கு திருடி, தனது சகோதரர் ரத்தன் பட்டேல்-ஐ வைத்து கொளத்தூரில் புதிய நகைக்கடையை துவங்கியுள்ளான்.
இதை அறிந்த நகைக்கடை உரிமையாளர்கள், நம்பிக்கையாக பழகியவரே இப்படி செய்து விட்டாரே என நினைத்து புகார் கொடுக்காமல், நகைகளை மட்டும் திருப்பி தருமாறு கூறியுள்ளனர். இதை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் வழியாக எழுதி வாங்கியும் உள்ளனர். இவை நடந்து ஒரு வருடம் ஆன நிலையில், வீரேந்தர் நகைகளை தராமல், ரஞ்சித் குடும்பத்தை அடியாட்கள் வைத்து மிரட்டியுள்ளான். இந்நிலையில் உரிமையாளர் ரஞ்சித் குமார், அயனாவரம் உதவி ஆணையரிடம் இன்று புகாரளித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments