விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நேற்று இரவுடன் தற்காலிகமாக நிறுத்தி கொண்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் 44 விமானங்கள் இருந்த போதிலும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக 7 விமானங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலையில் தற்போது உள்ளூர் மற்றும் சர்வதேச விமான சேவையை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடிக்கு உள்ளான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க டாடா குழுமம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல் ஜெட் ஏர்வேஸில் பங்குதாரராக உள்ள எத்தியாட் ஏர்வேஸூம் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு உதவ ரூ.1500 கோடி இடைக்கால நிதி தர எஸ்பிஐ வங்கி ஒப்புக்கொண்டது. ஆனால் இந்த நிதி வரும் வரை கூட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ரூ.7000 கோடி எரிபொருள் கட்டண பாக்கி, ஜனவரி முதல் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, விமான வாடகை பாக்கி ஆகிய பிரச்சனைகள் இருப்பதால் எஸ்பிஐ வங்கியின் ரூ.1500 கோடி கிடைத்தாலும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் சமாளிக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்காலிகமாக சேவையை நிறுத்தி கொள்ள முடிவு செய்த செய்தி வெளியானதும், நேற்றைய பங்குச்சந்தை நேர முடிவில் ஜெட் ஏர்வேஸ் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments