ஜெர்ரி தெரியுமா.. அது என் ரூம்ல இருக்குது, நீங்க டாம்ம கூப்பிட்டு வாங்க..! இணையத்தில் வைரலான வீடியோ.
Send us your feedback to audioarticles@vaarta.com
அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் எதோ வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். ஹோட்டல் அறையில் எலியைக் கண்டவருக்கு வாயில் வார்த்தை வரவில்லை. ரிசப்ஷனுக்கு போன் செய்தவருக்கு எலிக்கு ஆங்கிலத்தில் என்ன சொல்வார்கள் என மறந்துவிட்டார். `ரூம்ல எலி இருக்குன்னு சொல்லணும்' என்ன பண்றதுன்னு யோசித்துவிட்டு `என் ரூம்ல ஜெர்ரி இருக்கு வந்து உதவி பண்ணுங்கன்னு' மெசேஜ் பாஸ் செய்துவிட்டார். இந்த வீடியோதான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
வீடியோவுக்கு டாம் & ஜெர்ரி கான்செப்டில் ட்விட்டர்வாசிகள் போட்ட மீம் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு போனில் நடக்கும் உரையாடல்கள் பதிவாகியுள்ளது. அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு சென்றதாகவும் மொழி பிரச்னையால் எலி இருக்கிறது என்பதை எப்படி சொல்கிறார் பாருங்கள் என அந்த ட்வீட்டில் பதிவாகியுள்ளது.
`சார் நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்’ என அந்த வீடியோ தொடங்குகிறது. , ``ஹலோ.. என்னுடைய ஆங்கிலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. உங்களுக்கு டாம் & ஜெர்ரி தெரியுமா எனக் கேட்கிறார். அதற்கு ஹோட்டல் ஊழியர் தெரியும் என பதிலளிக்கிறார். ஜெர்ரி என்னுடைய அறையில் இருக்கிறது உங்களால் வரமுடியுமா?" என்கிறார்.
அதற்கு ஊழியரோ, `உங்களுடைய அறையில் எலி (மவுஸ்) இருக்கிறதா' என கேட்கிறார். ஆம், என பதிலளித்துவிட்டு, `நீங்கள் டாமை அழைத்து வாருங்கள்' என்றார். அதற்கு, `நாங்கள் டாமை வளர்க்கவில்லை’ என ஹோட்டல் ஊழியர் பதிலளிக்கிறார். `சரி பரவாயில்லை... நீங்கள் வந்து உதவி செய்யுங்கள்’ என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதேபோல் டாமை வைத்து பல மீம்ஸ்களும் இந்த வீடியோவுக்கு கீழே கமென்ட் செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com