விஷாலின் 'இரும்புத்திரை' வில்லனாக சர்வதேச பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது விஷால் 'இரும்புத்திரை' படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். முதன்முதலாக விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ள இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை விஷாலின் 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் வில்லனாக சரவதேச மார்ஷியல் நிபுணர் ஜெர்மி ரோஸ்கி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே திலீப் சுப்பராயனின் 'சங்கு சக்கரம்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபன் படத்தொகுப்பில், ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments